IQ (Tamil) – 02

July 12, 2021
Intelligent Questions
6 0
intelligent questions
28
Created on By admin

IQ (Tamil) - 02

1 முதல் 10 வரையிலான வினாக்கள் பின்வரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை . விடைகளைப் புள்ளிக் கோடுகளில் எழுதுக . கொழும்புக்கும் கண்டிக்குமிடையிலான தூரம் 72 கிலோ மீற்றர் . தனியார் பஸ் வண்டி ஒன்று இந்த 72 கிலோ மீற்றர் தூரப்பயணத்தை 2 1/2 (150 minutes)மணித்தியாலங்களிற் பூர்த்தி செய்கின்றது . ஒவ்வோர் அரை மணித்தியாலமும் கொழும்பிலிருந்து கண்டிக்கும் கண்டியிலிருந்து கொழும்புக்கும் தனியார் பஸ் வண்டிகள் புறப்படுவது உண்டு . இவ் வண்டிகள் ஓரிடத்திலும் நிறுத்தப்படாமல் பயணங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன . இந்த பஸ் வண்டிப் போக்குவரத்துச் சேவை காலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் . கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கடைசி பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து கண்டிக்குச் செல்லும் கடைசி பஸ் வண்டியும் இரவு 8.30 மணிக்குப் புறப்படும் . கொழும்புக்கும் கண்டிக்குமிடையிலான பஸ் வண்டிச் சேவை ஒரு கம்பனியால் நடத்தப்படுகின்றது .

1 / 10

ஒரு தினத்திலே இவ் வண்டிகள் கொழும்பிலிருந்து கண்டிக்கு எத்தனைமுறை பயணஞ் செய்கின்றன

2 / 10

கண்டியிலிருந்து ஒரு பஸ் வண்டி காலை 5.00 மணிக்குப் புறப்பட்டது . பஸ் வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகப் பயணம் 40 நிமிடங்கள் தாமதமாகியது . இந்த பஸ் வண்டியானது தனது பயணத்தைப் பூர்த்தி செய்வதற்கு எடுத்த நேரத்தில் கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்வதற்கான எத்தனை பஸ் வண்டிகள் புறப்பட்டிருக்கும் ?

3 / 10

கொழும்பிலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் பஸ் வண்டி ஒன்றை கண்டியிலிருந்து புறப்படும் எத்தனை பஸ் வண்டிகள் வழியில் சந்திக்கும் ?

4 / 10

காலை 4.30 மணிக்குப் பயணஞ் செய்யவாரம்பிக்கும் பஸ் வண்டியொன்று ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் ஒரு மணித்தியால நேரம் ஓய்வெடுத்தால் ஒரு தினத்திலே அது எத்தனை முறை பயணம் செய்யும் ?

5 / 10

ஒவ்வொரு பஸ் வண்டியும் ஒவ்வொரு பயணத்திற்குப் பின்னரும் ஒரு மணித்தியால நேரம் ஓய்வெடுத்தால் . இப் போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு அந்தக் கம்பனிக்கு ஆகக் குறைந்த பட்சம் எத்தனை பஸ் வண்டிகள் தேவைப்படும்

6 / 10

நேர அட்டவணையின் படி காலை 7.00 மணிக்குக் கண்டியிலிருந்து கொழும்புக்குப் புறப்படும் பஸ் வண்டியானது ஒரு தினத்திலே எத்தனை முறை பயணஞ் செய்யும்

7 / 10

ஒரு பஸ்வண்டி மூலம் ஒரு பயணத்திற்காக 1400 ரூபாய் பணம் கட்டணமாக சேகரிக்கப்பட்டால் , காலை 6.00 மணிக்குப் பயணஞ் செய்ய ஆரம்பிக்கும் பஸ் வண்டியொன்று மூலம் ஒரு தினத்திலே சேகரிக்கப்படும் மொத்தத் தொகை யாது

8 / 10

முந்திய இரவில் ஒவ்வொரு பஸ் வண்டியும் பஸ் நிலையத்தினை வந்து சேர்ந்த அதே ஒழங்கில் அடுத்த நாள் காலையிலும் பயணத்தை ஆரம்பித்தால் ஒவ்வொரு பஸ் வண்டியும் பஸ் நிலையத்தில் இரவிலே நிறுத்தப்பட்டிருந்த நேரம் எவ்வளவு

9 / 10

கண்டியிலிருந்து புறப்படும் எத்தனை பஸ் வண்டிகள் மாலை 6.15 க்குப் பிறகு கொழும்பை அடைகின்றன

10 / 10

கொழும்பிலிருந்து புறப்படும் எத்தனை பஸ் வண்டிகள் பகல் 12 மணிக்கும் மாலை 6.00 மணிக்குமிடையில் கண்டியை அடைகின்றன

Your score is

The average score is 46%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *