Intelligent Questions – 12

July 18, 2021
Intelligent Questions
5 0
19
Created on By admin

Intelligent Questions - 12

1 / 15

புகையிரதமொன்று பயணிக்கும் அதே திசையில் முறையே மணிக்கும் 4.5km, 5.4km வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இரண்டு மனிதர்களை முறையே 8.4s, 8.5s கடக்கிறது எனின் புகையிரத்தின் நீளம் யாது?

2 / 15

15 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தியாவுக்கு பிரிட்டானியை விட மூன்று மடங்கு வயது. அவர்களின் தற்போதைய வயது தொகை 94 ஆண்டுகள். பிரிட்டானிக்கு இப்போது எவ்வளவு வயது?

3 / 15

ஒரு நாளில் ஒரு கடிகாரத்தில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றை ஒன்று எத்தனை முறை தொட்டுச்செல்லும்

4 / 15

ஒரு கூடையில் உள்ள முட்டைகள் ஒவ்வொரு நிமிடமும் இரட்டிக்கும் ஒரு மணித்தியாலத்தில் அக்கூடை நிரம்பிவிட்டது.அந்த கூடையின் அரைவாசி எப்போது நிரம்பியிருக்கும்?

5 / 15

இரண்டு எண்களுக்கு இடைப்பட்ட வித்தியாசம் 1500 ஒரு எண்ணின் 8% ஆனது மற்றொரு எண்ணின் 12% ஆகும். அவ்விரு எண்களையும் காண்க?

6 / 15

A ஒரு வேலையை 9 நாட்களிலும் B அதே வேலையை 12 நாட்களிலும் முடிப்பர்.A யும் B யும் ஒன்று விட்டு ஒரு நாள் மாறி மாறி வேலை செய்தால் எத்தனை நாட்களில் வேலை முடியும்?

7 / 15

A ஒரு வேலையை 10 நாட்களிலும்,B ஒரு வேலையை 15 நாட்களிலும் முடிப்பர்.தொடக்கத்தில் A யும் B யும் சேர்ந்து வேலையை செய்கின்றனர்.சில நாட்களுக்கு பிறகு A வெளியேறுகிறார்.மீதமுள்ள வேலையை B 5 நாட்களில் முடிக்கிறார் எனில் A எத்தனை நாட்களுக்கு பிறகு வெளியேறினார்?

8 / 15

10 வருடங்களுக்கு முன் தந்தையினதும் மகனினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 34 வருடங்களாகும். தந்தை, மகனின் தற்போதைய வயது விகிதம் 7:2 ஆகும். எனின் மகனின் தற்போதைய வயது என்ன?

9 / 15

இன்றிலிருந்து நான்கு வருடங்களின் பின்னர் குறித்த தந்தையின் வயது அவரின் மகனின் வயதின் நான்கு மடங்காகும். இன்றிலிருந்து 7 வருடங்களின் பின்னர் அந்த தந்தையினது வயது அவரது மகனின் வயதை போல் மூன்று மடங்கை விட மூன்று வருடங்களால் கூடியதாகவும். எனின் தந்தையின் தற்போதைய வயது எத்தனை வருடங்களாகும் ?

10 / 15

அகிலா, குமுதினி, வதனி என்ற மூன்று நண்பிகளினதும் நிறைகளின் கூட்டுத்தொகை 120 கிலோ கிராம்களாகும். வதனியினது நிறை அகிலாவினதும் குமுதியினதும் நிறைகளின் கூட்டுத்தொகை சமனாகும். அவ்வாறே குமுதியினது நிறை வதனியின் நிறையின் அரைவாசி ஆகும். அவ்வாறெனின் அகிலாவின் நிறை எத்தனை கிலோ கிராம்களாகும்?

11 / 15

தொடர் தள்ளுபடிகள் முறையை 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ14400/- விற்கப்பட்டது எனின் குறித்த விலை யாது ?

12 / 15

ஒன்றுகூடல் ஒன்றில் இடம்பெற்ற மொத்த கை குலுக்கல்களின் எண்ணிக்கை 105 ஆகும். எனின் அந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்ட நபர்களின் எண்ணிக்கை யாது ?

13 / 15

ஒன்றுகூடல் ஒன்றில் கலந்து கொண்ட 12 பேர் ஒன்றுகூடலில் ஆரம்பத்திலும் இறுதியிலும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். அதில் இடம் பெற்ற மொத்த கை குலுக்கல்கள் எத்தனை

14 / 15

தனது வேலையாட்களை விட இரு மடங்கு வேகமாக பணியாற்றும் ஒருவர் குறித்த வேலையை 6 நாட்களில் செய்து முடிக்கிறார். அதே வேலையை 4 வேலையாட்களைப் பயன்படுத்தி செய்தால் அதனை முடிக்க அவருக்கு எத்தனை நாட்கள் எடுக்கும்?

15 / 15

இரண்டு எண்களின் கூடுதல் 36. மேலும் அவற்றுள் ஓர் எண் மற்றோர் எண்ணைவிட8 அதிகம் எனில், அந்த எண்கள்?

Your score is

The average score is 41%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *