8,5,4,2,0 ஆகிய இலக்கங்களைக் கொண்டு 5ஆல் வகுபடும் எண்களைக் காண இறுதி இலக்கம் 0 அல்லது 5 ஆக இருக்க வேண்டும்.
மேலும் அது 80000 இற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பதால் அவ்வெண்ணின் முதலிலக்கம் 8 ஆக இருக்க முடியாது, அத்துடன் 5 இலக்க எண் உருவாக்கப்பட வேண்டுமென்பதால் முதலிலக்கம் 0 ஆகவும் வரமுடியாது.
எனவே,
1) 2, ..., ..., ..., 0
2) 2, ..., ..., ..., 5
3) 4, ..., ..., ..., 0
4) 4, ..., ..., ..., 5
5) 5, ..., ..., ..., 0
என்ற வகையில் நடுவிலுள்ள மூன்று இலக்கங்களும் இடம் மாறி மாறி எண்கள் உருவாகும்.
அதன்படி,
(1) இல் மூன்று இலக்கங்கள் இடம் மாறுவதால் இங்கு 3! அதாவது 3! = 3×2×1=6 வெவ்வேறு எண்கள் உருவாகும்.
எனவே மொத்தமாக 5×6=30 வெவ்வேறு எண்களை உருவாக்கலாம்.