Created on
By admin
IQ (Tamil) - 02
1 முதல் 10 வரையிலான வினாக்கள் பின்வரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை . விடைகளைப் புள்ளிக் கோடுகளில் எழுதுக . கொழும்புக்கும் கண்டிக்குமிடையிலான தூரம் 72 கிலோ மீற்றர் . தனியார் பஸ் வண்டி ஒன்று இந்த 72 கிலோ மீற்றர் தூரப்பயணத்தை 2 1/2 (150 minutes)மணித்தியாலங்களிற் பூர்த்தி செய்கின்றது . ஒவ்வோர் அரை மணித்தியாலமும் கொழும்பிலிருந்து கண்டிக்கும் கண்டியிலிருந்து கொழும்புக்கும் தனியார் பஸ் வண்டிகள் புறப்படுவது உண்டு . இவ் வண்டிகள் ஓரிடத்திலும் நிறுத்தப்படாமல் பயணங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன . இந்த பஸ் வண்டிப் போக்குவரத்துச் சேவை காலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் . கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் கடைசி பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து கண்டிக்குச் செல்லும் கடைசி பஸ் வண்டியும் இரவு 8.30 மணிக்குப் புறப்படும் . கொழும்புக்கும் கண்டிக்குமிடையிலான பஸ் வண்டிச் சேவை ஒரு கம்பனியால் நடத்தப்படுகின்றது .